யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடாபில் எதிர்வரும் 31ம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நான்கு மாணவர்களை கைது செய்து, புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டே இந்தப் பொராட்டம் நடத்தப்பட உள்ளது.
மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டம் நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக