சனி, 1 டிசம்பர், 2012

காவற்துறையினர் தமது கடமைகளின் போது கொட்டன் பொல்லுகளை மாத்திரமே எடுத்துச் செல்ல வேண்டும் - கோத்தபாய

காவற்துறையினர் தமது கடமைகளின் போது கொட்டன் பொல்லுகளை மாத்திரமே எடுத்துச் செல்ல வேண்டும் - கோத்தபாயகாவற்துறையினர் தமது கடமைகளின் போது, பாரதூரமான பணிகளின் தேவையின் போது மாத்திரமேயன்றி, ஏனைய கடமைகளில் கடந்தகாலத்தை போன்று, கொட்டன் பொல்லுகளை மாத்திரமே எடுத்துச் செல்ல வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிததுள்ளார்.பாரிய குற்றவாளிகளை கைதுசெய்ய செல்லும் போது, துப்பாக்கியை எடுத்துச் செல்லாம் எனவும் தேவையேற்படாத சந்தர்ப்பத்தில், துப்பாக்கிகளை கொண்டு செல்லும் தேவையில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
நாடும் வழமையான நிலைமைக்கு திரும்பியுள்ள நிலையில், எந்த நேரமும் துப்பாக்கிகளை ஏந்தியிருக்கும் தேவையில்லை. இதனால் பெட்டன் பொல்லுகள் மாத்திரமே காவற்துறையினரின் கைகளில் இருக்க வேண்டும் எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பாக சுற்றறிக்கைகள் சகல காவற்துறை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக