வியாழன், 6 டிசம்பர், 2012

இராணுவத்தை விலக்கி விட்டு யாழ்.பல்கலையில் தவம் கிடக்கும் புலனாய்வாளர்கள்..!

News Serviceயாழ்.பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து படையினைரையும், பொலிஸாரையும் விலக்கிக் கொள்வதென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக சுற்றாடலில் வெளிப்படையாக பொலிஸார் தொடர்ந்தும் நிலைகொண்டிருக்கின்றனர். யாழ். பலாலியில் இராணுவத்தினருக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்போது பல்கலைக்கழக சுற்றாடலிருந்து இராணுவத்தினரையும், பொலிஸாரையும் விலக்கிக் கொள்வதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரையில் பொலிஸார் விலக்கிக் கொள்ளப்படவில்லை. மாணவர் விடுதிகளுக்கு முன்னால் நிரந்தமாக முகாம் அமைத்துக் கொண்டு பொலிஸார் தங்கியிருக்கின்றனர். அவர்களுடன் புலனாய்வாளர்கள் வந்து நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். படையினர் பல்கலைக்கழக சுற்றாடலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டாலும் இராணுவப் புலனாய்வாளர்களின் நடமாட்டம் தொடர்கின்றது. மேலும் பொலிஸார் பல்கலைக்கழகத்திற்கு அப்பாலேயே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டபோதும், பொலிஸார் பல்கலைக்கழக வாயிலிலேயே தவம் கிடப்பதை இன்று மாலை வரையில் காணமுடிந்தது. இந்நிலையில் மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகள் பெரும் அச்சுறுத்தலானதாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக