வியாழன், 6 டிசம்பர், 2012

யாழில்மக்களை விரட்டியடித்து சுற்றுலா விடுதிக்கான அடிக்கல்லை யோகேஸ்வரியும் ஹத்துறுசிங்கவும் நாட்டினர்

யாழில்மக்களை விரட்டியடித்து சுற்றுலா விடுதிக்கான அடிக்கல்லை யோகேஸ்வரியும் ஹத்துறுசிங்கவும் நாட்டினர்யாழ்.நகரின் புறநர்பகுதியான கொட்டடி பகுதியிலுள்ள முத்தமிழ் திடல் காணியிலிருந்த பொது மக்கள் அண்மையில் விரட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு அவசர அவசரமாக தற்போது 250 மில்லியன் ருபா செலவில் மிகவும் பிரமாண்டமான சுற்றுலா விடுதி அமைக்கப்படவுள்ளது.

அதற்கான அடிக்கல்லினை யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தளபதி மகிந்த ஹத்துறுசிங்க மற்றும் ஈபிடியின் யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் இணைந்து இன்றைய தினம் நாட்டி வைத்துள்ளனர்.

எனினும் இக்காணிகளில் குடியிருந்தவர்களுக்கு எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படாததால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதுடன் வீதிகளில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளதாக இக்காணிகளில் வாழ்ந்த மக்கள் தெரிவிக்கப்படுகின்றனர்.

அரச காணியான கொட்டடி முத்தமிழ் திடல் காணியில் கடந்த கால கோட்டை முகாம் மீதான தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களிற்கு சென்றிருந்தனர்;.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த வருடம் தாம் வசித்து வந்த காணிகளில் வந்து மீளக்குடியமர்ந்திருந்தனர்.

அவர்கள் மீள்குடியமர்ந்த போது எந்தவித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கின்ற அப்பகுதி மக்கள் தமக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி பெற்றுத் தருவதாகவும் கூறியதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் அங்கு தற்போது சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்திருந்தன. அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளை கடந்த மாத இறுதிப்பகுதியில் இரானுவத்தினர் நேரடியாகவே மேற்கோண்டிருந்தனர்.

இராணுவத்தினரின் நடவடிக்கைக்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதனைத் தொடர்ந்து அங்கிருந்து விலகிச்சென்றிருந்த இரானுவத்தினர் சில நாட்களின் பின்னர் கனரக வாகனங்களின் உதவியுடன் அங்கிருந்த மக்களது குடிசைகளையும் வீடுகளையும் இடித்து நொருக்கியுமிருந்தனர்.

இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் மனித உரிமை ஆனைக்குழூவில் முறைப்பாடுகளை செய்துமிருந்தனர். எனினும் இதுவரை வெளியேற்றப்பட்ட மக்களுக்கு எதுவித ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இவ்வாறானதொரு நிலையில் அந்த மக்களது கண்முன்னே அவர்களது வீடுகளை இடித்து தள்ளி விட்டு தற்போது சுற்றுலா விடுதி அமைக்கப்படவுள்ளது.

சுமார் 250 மில்லியன் ருபா செலவில் மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ள அரச ஊழியர்களுக்கான இவ்விடுதி; நவீன முறையில் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக காணப்படுமென மேயர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரே நேரத்தில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கக் கூடிய வகையில் அமையவுள்ளதாகவும் கூறினார். எனினும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது சக பாடிகள் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் அவரது போட்டி அரசியல்வாதியான அங்கயன் முக்கிய விருந்தினராக அங்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக