தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.சம்பந்தனின் உரையின் முதல் பகுதி மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இனவாத கோட்பாடுகளை கைவிட்டு உரையாற்றினார். தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை மட்டும் கொலை செய்யவில்லை.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும்.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இராணுவத்தினர் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு இன மக்களின் மனங்களை வென்று வருகின்றனர்.
படையினர் இன்று தேசியப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக