திங்கள், 3 டிசம்பர், 2012

தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள்

News Serviceதமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை உணர்ந்தேன். யாழ் பல்கலையில் கல்வி பயிலும் ஒரு சிங்கள மாணவி
நாங்கள்புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களை புலிகளாக்கிவிட்டிருக்கிறோம்.
26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது.
மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள்.
தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள்.. அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்..
மாலை 6.05க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி. என அவரது டிவீட்டரில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக