பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதென உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சங்கம் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல்
செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதவான் காமினி அமரக்கோன் தலைமையிலான நீதவான்கள் இந்த மனுவை பரிசீலனை செய்தனர்.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்பில் சுயாதீனத்தன்மை காணப்படாவிட்டால் சட்டத்தரணிகள் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த மனு எதிர்ரும் ஜனவரி மாதம் 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து மனுவை ஏற்றுக்கொள்வதென உச்ச நீதிமன்ற நீதவான்கள் தீர்மானித்துள்ளனர்.
மனுதாரர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்ப்புக்களை வெளியிட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக