வேலணைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சோளாவத்தை கிராமத்துக்கு உடன் மின் வழங்கி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக வேலணை சோளாவத்தை கிராமம் இருளில் மூழ்கியே காணப்படுகிறது.
வேலணைப் பிரதேச சபைத் தலைவர் சி.சிவராஜா வடக்கின் வசந்தம் மின்சார திட்ட முகாமையாளருக்கு இந்த விடயம் தொடர்பாக அவசர கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வேலணைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களுக்கு வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மின்சாரம் வழங்குமாறு கோரியிருந்தோம்.
எனினும் சோளாவத்தையில் உள்ள 30 குடும்பங்களும் செட்டிபுலத்தில் உள்ள 172 குடும்பங்களுக்குமாக மொத்தம் 202 குடும்பங்கள் கடந்த 30 வருடங்களாக இருளில் மூழ்கியுள்ளன.
இதிலும் குறிப்பாக மின்சாரம் வழங்கப்பட வேண்டிய சோளாவத்தை கிராம மக்கள் இதுவரை 12 இக்கும் மேற்பட்ட மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.
எனவே வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளர் சோளாவத்தை கிராமத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கி உதவ வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக