வெள்ளி, 18 ஜனவரி, 2013

சுமந்திரன் உட்பட 4 சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் கடிதங்கள்!

News Serviceசட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, ஜயம்பதி விக்ரமரட்ன, சட்டத்தரணிகளான ஜே.சீ. வெலியமுன மற்றும் எம்.சுமந்திரன் ஆகியோருக்கு இவ்வாறு அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொஹூவல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அச்சுறுத்தல் கடிதம் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன வெலிக்கடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக