வியாழன், 17 ஜனவரி, 2013

உலகத் தமிழர் பேரவை ஊடகப் பேச்சாளரை சந்தித்து மங்கள சமரவீர பேச்சு


உலகத் தமிழர் பேரவை ஊடகப் பேச்சாளரை சந்தித்து மங்கள சமரவீர பேச்சு
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

உலகத் தமிழர் பேரவை ஊடகப் பேச்சாளரை சந்தித்து மங்கள சமரவீர பேச்சு!இந்த சந்திப்பு அண்மையில் இடம்பெற்றதாக உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கனடாவில் இருந்து வெளிவரும் ´ஒருபத்திகை´க்கு வழங்கிய தொலைபேசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சந்திப்பு உலகத் தமிழர் பேரவை சார்பில் இடம்பெறவில்லை எனவும் தனிப்பட்ட ரீதியில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நமது சமுகத்தின் பிரச்சினை குறித்து சமுகத்திற்குள்ளும் வெளியிலும் உள்ள நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிடின் பிரச்சினைக்கு தீ்ர்வு காண முடியாது என சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக