வெள்ளி, 11 ஜனவரி, 2013

அமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரை வார்த்துள்ளார்: நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவிப்பு.

News Serviceஅமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரை வார்த்துள்ளார்: நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவிப்பு.அமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரைவார்த்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாசுதேவ நாணயக்கார தனது சிறு பராய ஹீரோக்களில் ஒருவர் எனவும், வாசுதேவவை பாராளுமன்றில் சந்தித்தமை பெருமையளிப்பதாக வீட்டு உறவினர்களிடம் கூறி பெருமிதம் அடைந்ததுண்டு என அவர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த நடவடிக்கைகளுக்காக வெட்கமடைவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். வாசுதேவ நாணயக்காரவின் சில வழக்குகளில் தன்னார்வ அடிப்படையில் சுமந்திரன் ஆஜராகியதாகவும் இந்த நடவடிக்கைகள் வருத்தமளிப்பதாகவும் சுமந்திரன் நேற்றைய தினம் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக