வெள்ளி, 11 ஜனவரி, 2013

நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் பதவியில் இருந்து விலக போவதில்லை - ஷிராணி

நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் பதவியில் இருந்து விலக போவதில்லை -பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் தான் பதவியில் இருந்து விலக போவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தனக்கு எதிராக நாடாளுமன்றம் முன்னெடுத்த செயற்பாடுகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவிற்கு அமைய பிரதம நீதியரசர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.எவ்வாறாயினும் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக