மகளின்வருகையைஎதிர்பார்த்துக்கொண்டிருந்த தாய் நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் கதறியழுதார். அந்தத் தாயுடன் இணைந்து மூதூர் பிரதேசமும் சோகக் கடலில் மூழ்கியது.ரிசானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றார். முதலில் நம்ப மறுத்தார். ரிசானாவின் தந்தை சோகத்தினால் மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர். ரிசானாவின் தாய், தந்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்கள் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத இந்தத் துயரச் சம்பவத்தினால் நேற்று நாடே சோகத்தில் மூழ்கியது. ரிசானா விரைவில் விடுதலையாவார் என்று போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை ரிசானாவின் இல்லத்தில் திரண்ட மக்கள் சாபம் உண்டாகட்டும் எனக் கூறி திட்டித் தீர்த்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக