மீண்டும் செஞ்சோலை சிறுவர் இல்லம் திறக்கப்படவுள்ளது. செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லம் தமிழீழ விதலைப்புலிளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட சிறுவர் இல்லம் ஆகும். தலைவர் பிரபாரகரனின் நேரடி வழிப்படுத்தலுடன் இந்த இல்லம் இயங்கிவந்தது. அத்துடன் செஞ்சோலை சிறார்களுடன் தலைவர் பிரபாகரன் மிகவும் நெருக்கமாக பழகி வந்திருந்தார் எனக் கூறப்பட்டது. செஞ்சோலையில் தலைவர் பிரபாகரன் புலிக்குழந்தைகளை வளர்க்கிறார் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலை வளாகம்மீது இலங்கை அரச விமானப்படை குண்டு வீசித்தாக்கியதில் 53 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டிருந்தனர். கிளிநொச்சியில் இரணைமடுவில் உள்ள புலிகளின் செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருத்த இடத்தில் தற்பொழுது அதே பெயருடனும் அதே பெயர்ப்பலகையுடனும் செஞ்சோலை சிறார் இல்லாம் மீண்டும் திறக்கப்படுகிறது.
இந்த இல்லத்தை இப்பொழுது விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுறவுப் பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்தநாதன் திறக்கின்றார். செஞ்சோலை சிறார் இல்லத்துடன் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மேலும் இரண்டு இல்லங்களுக்கு பொறுப்பாக கே.பியை அரசாங்கம் அமர்த்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக