வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை குறித்த அகில கால மீளாய்வு அமர்வு தீர்மானங்கள் கவனத்திற் கொள்ளப்படும்

ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை குறித்த அகில கால மீளாய்வு அமர்வு தீர்மானங்கள்ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை குறித்த அகில கால மீளாய்வு அமர்வுத் தீர்மானங்கள் கவனத்திற்கொள்ளப்பட உள்ளது.அகில கால மீளாய்வு அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் உறுப்பு நடுகள் 199 பரிந்துரைகள் முன்வைத்திருந்தன.

இவற்றில் 98 பரிந்துரைகளை நிராகரித்த இலங்கை அரசாங்கம் 111 பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.இதன் அடிப்படையில் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக