செவ்வாய், 29 ஜனவரி, 2013

இந்திய அழுத்தம் காரணமாகவே சம்பிக்கவின் அமைச்சர் பதவியில் மாற்றம்: திஸ்ஸ சொல்கிறார்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து பாட்டளி சம்பிக்க ரணவக்க விலக்கப்பட்டமையானது இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் பிரேரிக்கப்பட்ட யோசனைக்கு அமையவே இந்த மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பூர் அனல் மின் நிலையத்தை அடிப்படையாக கொண்டே இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜே வீ பியின் தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பிரசார செயலாளர் விஜித ஹேரத் நிபுணத்துவ முறையில் அமைச்சரவை மாற்றங்கள் நிகழவில்லை என குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக