அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயமானது தமிழ் மக்களது அபிலாசைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கமாக அமைய வேண்டும் என நவசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது.எனினும் அமெரிக்காவின் நிதி உதவியினாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் இயங்கி வருகின்றது. எனவே நிச்சயம் அந்த நாட்டின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியும் என்று நவசமாஜக் கட்சியின் தலைவரான விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
இருப்பினும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயமானது தமிழ் மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும்.
அத்துடன் நாட்டில் மனித உரிமை மீறல்கள் , நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாமை தொடர்பில் அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டிலேயே உள்ளது.
எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நிச்சயம் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா ஐ.நா வில் முன்வைக்கும் .ஆனால் இந்த அரசாங்கம் அமெரிக்காவின் பணத்தில் ஓடுகின்றது எனவே அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தம் எவ்வாறு இருக்கப்போகின்றது எனத் தெரியாது.
இருப்பினும் இந்தியா உண்மையிலேயே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் அக்கறை கொள்ளவில்லை தமிழரைப் பயன்படுத்தி இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகித்து அதன் மூலம் காணிகளை கொள்ளையடிப்பதையும் , வர்த்தகத்தை விஸ்தீரணப்படுத்தவுமே இந்தியா முயல்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக