யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி வீட்டுக் கிணற்றிலிருந்து அடிகாயங்களுடன் இளம் தாயின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் மீட்டுள்ளனர்.
இவரது சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். தொண்டைமானாறு வல்லை வீதியோரமாகவுள்ள ஒற்றைப்பனையடி வயல் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொத்தியகாடு கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த கிட்டினன் தவராசா (வயது - 50) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக