புதன், 30 ஜனவரி, 2013

சர்வதேச நீதிமன்றின் கவனத்திற்கு சிவஞானம் சிறிதரனின் பிரச்சனை-

சர்வதேச நீதிமன்றின் கவனத்திற்கு தனக்கு எதிராக பின்னப்பட்டு வரும் அரசியல் சதி வலை தொடர்பில் கொண்டு செல்லப்பட்டுள்ளது

சர்வதேச நீதிமன்றின் கவனத்திற்கு  சிவஞானம் சிறிதரனின் பிரச்சனை-சர்வதேச நீதிமன்றின் கவனத்திற்கு தனக்கு எதிராக பின்னப்பட்டு வரும் அரசியல் சதி வலை தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிறீதரன் கொண்டு சென்றுள்ளார்.

சுவிற்ச்சலாந்தை தலைமையகமாக கொண்டு செய்றபட்டு வரும் சர்வதேச நீதிமன்றின் இலங்கைக்கான பிரதிநிதியான ஜ.தே.க நாடாளுமன்ற அங்கத்தவர் ஜெயலத் மூலமாக தான் இவ்விடயத்தை கொண்டு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தனது கட்சி அலுவலகம் இரு தடைவைகள் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டமை மற்றும் தனது தனிப்பட்ட செயலாளர் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னணி பற்றி விளக்கி கூறுவதற்கான பத்திரிகையாளர் மாநாடொன்றை அவர் இன்று யாழ்.நகரில் கூட்டியிருந்தார்.

இவர்கள் இருவரும் தற்போது கொழும்பிலுள்ள 6ம் மாடி சித்திரவதை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்த சிறீதரன் இது வரை பொன்.காந்தனை பார்வையிட அவரது குடும்பத்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். கைதுகளை தொடர்ந்து திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட தேடுதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் துண்டுபிரசுர வெளியீடுகள் தமது கட்சி அலுவலகத்தை கிளிநொச்சியிலிருந்து அகற்றும் நோக்கத்தினை கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக அடுத்து நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் மாகாணசபை தேர்தலில் வேழன் கிளிநொச்சியில் போட்டியிடலாமென எதிர்பார்ப்புக்களுள்ளன. அத்துடன் கூட்டமைப்பு வெற்றி பெறுவதை தடுக்கவுமே இந்நாடகமென தெரிவித்த அவர் தமது கட்சி பணிகள் மக்களுக்காக தொடர்வதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக தமிழ் பெண்கள் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பாக் அம்பலப்படுத்தியது தன் மீதான பழிவாங்கலுக்கு காரணமென சிறீதரன் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக