வியாழன், 31 ஜனவரி, 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் - அமெரிக்கா

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் - அமெரிக்காஇலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்றவற்றை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக இதனைக் கருத வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே உலக நாடுகளின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வுகளிலும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து இந்தியா தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக