திங்கள், 21 ஜனவரி, 2013

அரசியலில் ஈடுபடும் திட்டமில்லை – சரத்

அரசியலில் ஈடுபடும் திட்டம் கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஓய்வூக் காலத்தை அமைதியான முறையில் கழிப்பதற்கே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்டான பிரதேசத்தில் அமைந்துள்ள தமது தோட்டத்தில் ஓய்வூக் காலத்தை கழிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்அரசியலில் ஈடுபடவோ அல்லது அரசாங்கத்தின் பதவிகளைப் பெற்றுக்கொள்ளவோ விரும்பியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும், சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள விரும்புவோருக்கு உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சில ஊடகங்கள் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சரத் என் சில்வா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக