செவ்வாய், 22 ஜனவரி, 2013

தவறான தகவல்களை வைத்துக்கொண்டு அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை

News Serviceதவறான தகவல்களை வைத்துக்கொண்டு அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின், இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுக்காக செல்லவிருந்த மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்கவை அமெரிக்கா குறித்த நிகழ்ச்சி திட்டத்துக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தது.
இறுதிப் போரின் போது 53 வது படைப்பிரிவில் கட்டளைத் தளபதியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அவருக்கான பயிற்சி அனுமதியை அமெரிக்கா மறுத்திருந்தது. எனினும் மேஜர் ரணசிங்க இறுதிப் போரின் போது 53 வது படையணி தளபதியாக கடமையாற்றவில்லை. அந்தப் படையணியின் தளபதியாக மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவே கடமையாற்றினார். இந்தநிலையில் தமது இராணுவ பயிற்சித் திட்டத்துக்கு இலங்கையின் இராணுவ அதிகாரி ரணசிங்கவை நட்பு நாடு என்ற வகையில் அமெரிக்கா உள்வாங்காமை தொடர்பில் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். மேஜர் ரணசிங்க, மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்கவுக்கு பின்னர், விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு பணிகளுக்கான பொறுப்பதிகாரியாக 2010ம் ஆண்டு பெப்ரவரியில் இருந்து கடமையாற்றி வந்தார் என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக