திங்கள், 21 ஜனவரி, 2013

மகிந்த அரசின் ஆட்சி அடுத்த ஆண்டு வரையே நீடிக்கும் - ரணில்

News Serviceமகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் 2014 வரையிலேயே நீடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிஸ்கட் பெக்கட் ஒன்றை எடுத்துக் கொண்டால் அதில் கலாவதியாகும் திகதி காணப்படும். அதேபோன்று இந்த அரசாங்கம் கலாவதியாகும் திகதி அடுத்த ஆண்டாகும். அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடே மரக்கறி மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்விற்கு காரணம். கத்தரிக்காய் ஒரு கிலோ 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. டிசம்பர், ஜனவரி மாதத்தில் நாட்டில் நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதனை தீர்மானித்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பலை வலுப்பெற்று வருகின்றது. நாட்டின் கல்வித்துறை சிரியாவைப் போன்றும், சுகாதாரத்துறை லிபியாவைப் போன்றும் மாறியுள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொடங்கஸ்லந்த பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக