தமிழ்மக்கள் மீது இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்ட சிங்கள அரசபயங்கரவாதம், தற்போது முஸ்லீம் மக்களுக்கு எதிராக பரவலான தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.இதன் ஒரு கட்டமாக, முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை இடிக்கத் தொடங்கிய சிங்கள பௌத்த பேரினவாதிகள், பின்னர் முஸ்லீகள் இறக்குமதி செய்யும் ஹலால் உணவுகள் அல் கய்டா தீவிரவாதத்துக்கு பணஉதவிகளை வழங்குவதாக கூறி அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கினர்.
தற்போது, முஸ்லீம்களின் பொருளாதார முதலீடுகளில் முன்னணியில் திகழும் நோ லிமிட் என்னும் மாபெரும் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு எதிராக இவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
பொதுபல சேன என்னும் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பே இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இவர்களுக்கு பின்னணியில் ஜாதிக ஹெல உறுமய, கோத்தபாய ராஜபக்ச போன்றோர்இருப்பதாக kumaran.comமின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்புத் தரப்புகள் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த கருத்து சிறுபான்மை முஸ்லீம்களளை இலக்கு வைத்தே கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக