செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஐ.நா. மனித உரிமைப் சபையின் கூட்டத் தொடர் சிறிலங்காவுக்கு மரணப் பொறியாக

ஜெனிவாவில் எதிர் வரும் மார்ச் மாதம் இடம் பெறவிருக்கும்அமையும் அபாயம் அதிகமாகவே உள்ளது.

சர்வதேச நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் இந்தக் கூட்டத் தொடரின் போது சிறிலங்கா அரசுக்கு எதிராக பிரயோகிக்கப்படும். இதைத் தீர் மானிக்கும் சக்தி இந்தியாவின் கைகளிலேயே உள்ளது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்றும் அவை குற்றஞ்சாட்டின.

கடந்த ஜெனிவாக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராகத் தீர்மானமொன்றை நிறைவேற்றி கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்த அமெரிக்கா, மார்ச் மாதக் கூட்டத் தொடரிலும் பிரேரணையொன்றைக் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சர்வதேச நாடுகளும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து தெரிவிக்கையில்,

நடக்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராகக் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். இதனைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியாதான். அதன் கைகளிலேயே யாவும் தங்கியுள்ளன.

ஏனெனில், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமக்கு எதுவும் தெரியாததுபோல மேலே பார்த்துக்கொண்டிருந்த இந்தியா, இப்போதும் அவ்வாறான போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது போன்றே இம்முறையும் இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்று கொண்டுவரப்படலாம்.

ஆனால் சிறிலங்கா அரசை, சர்வதேச ரீதியில் சவாலுக்குட்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா அதனைக் காப்பாற்றிவிடுகிறது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு அக்கறையில்லை.

மாறாக சிறிலங்காவை கொண்டு தமது பொருளாதாரத்தைச் வலுப்படுத்தவே அது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சிபார்சுகளின் அமுலாக்கம், பிரதம நீதியரசரின் பதவிநீக்கல் விவகாரம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது ஆகிய விடயங்கள் ஜெனிவாக் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகள், சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க ஏதுவாக அமையும்.

எனினும், அங்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் எவ்வாறமையும் என்பது இந்தியாவின் தீர்மானத்தில்தான் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக