வியாழன், 17 ஜனவரி, 2013

பிரதம நீதியரசர் நியமனம் குறித்து தற்போதைக்கு கருத்து வெளியிடப் போவதில்லை – ஐ.நா

புதிய பிரதம நீதியரசர் நியமனம் குறித்து தற்போதைக்கு கருத்து எதனையும் வெளியிடப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. நீதிமன்றக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தெரியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நியமனம் குறித்து தற்போதைக்கு கருத்து வெளியிடப் போவதில்லை – ஐ.நா.
இலங்கை நிலைமைகள் குறித்து ஊடகங்களின் மூலம் அறிந்து கொண்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர், மார்டீன் நெசர்கீ தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைக்கு இந்த நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டமை வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்தும் என அமெரிக்கா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக