கொழும்பின் 400 வீதிகள் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட 300 வீதிகள் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது.
384 வீதிகளின் பெயர்களை மாற்றம் செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் பெயரிடப்பட்ட வீதிகளின் பெயர்கள் இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளன.சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கைக்கு பொருந்தக் கூடிய வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதிகமாக பிரித்தானிய பெயர்களைக் கொண்ட வீதிகளே இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன.
இந்தப் பெயர்கள் தற்போதைய இலங்கைக்கு பொருத்தமற்றது எனவும், அது தொடர்பில் ஜனாதிபதியிடம் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கலாச்சார அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக