சனி, 16 பிப்ரவரி, 2013

ஜெனீவா கூட்டத்தின் பின்னரே இலங்கை செல்லும் முடிவு

சிறிலங்காவுக்கான தனது விஜயம் தொடர்பில் மார்ச் மாத ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுக்குப் பின்னரே முடிவு செய்யப்படுமென ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இதனை அவர் இன்னர்சிட்டி பிரஸுக்குத் கூறியுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. இருப்பினும் அதற்கு முன்னர் தனது பத்துப் பிரதிநிதிகளை அவர் சிறிலங்காவுக்கு அனுப்பவுள்ளனர். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்காகவே இந்தக் குழுவை அவர் அனுப்பி வைக்கவுள்ளார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக