திங்கள், 25 பிப்ரவரி, 2013

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்காக பல்லாயிரம் இரு நாட்டு பக்தர்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்காக பல்லாயிரம் இரு நாட்டு பக்தர்கள்இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இரு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் தீவுக்கு வந்தவண்ணம் உள்ளனர். திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை இடம்பெற்ற விசேட ஆராதனைகளையும் பக்தர்கள் தீவை வந்தடைவதையும் படங்களில் காணலாம்.இலங்கையின் வடகடலில் அமைந்துள்ள கச்சதீவு உற்சவத்தில் சுமார் 10 ஆயிரம் வரையிலான பக்தர்கள் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவிலிருந்தும், இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தந்திருந்தனர்.
இந்தியாவிலிருந்கு சுமார் பத்தாயிரம் பேர் வரையில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மூவாயிரத்துக்கும் சற்று அதிகமானவர்களே வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.கச்சதீவுக்கு வருகை தந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் என்பன யாழ்ப்பாணம் அரச செயாலக அதிகாரிகளினாலும், நெடுந்தீவு பிரதேச செயலக அதிகாரிகளினாலும் செய்யப்பட்டிருந்தன.இந்த ஏற்பாடுகளுக்கு கடற்படையினர் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இறுதி யுத்த நிகழ்வுகள் குறித்து பொறுப்பு கூறதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் இலங்கை அரசு மீது அதிகரித்திருக்கின்ற ஒரு சூழலில் தமிழக மக்கள் மத்தியில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசியல் ரீதியான ஒரு எழுச்சி காணப்பட்டுள்ள பின்னணியில் தமிழகத்திலிருந்து தாங்கள் எந்தவிதமான தடங்கலுமின்றி வந்திருந்ததாக தமிழகத்தில் இருந்து வந்திருந்தவர்களில் சிலர் தெரிவித்தனர்.
இந்திய இலங்கை மக்களிடையே இறுக்கமான ஓர் உறவின் அடையாளமாகத் திகழும் கச்சதீவின் விசேட பூஜை நாளை காலை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் கச்சதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேனானந்தா நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக