வட மாகாண சபைக்கான பொதுத் தேர்தலை வடப் பகுதியில் வாழும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்துமாயின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் பொது எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில்,
வட மாகாண மக்களின் வட மாகாண சபைக்கான தேர்தல் விருப்பத்தை கருத்தில் கொண்டு தேர்தலை உடன் நடத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் பிரதிநிதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் போட்டியிடும். எமக்கும் ஒரு சில இடங்கள் கிடைக்கலாம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக