வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சகல உறுப்பு நாடுகளும் அமர்வுகளில் பங்கேற்கும் - இலங்கை

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில், சகல உறுப்பு நாடுகளும் பங்கேற்கும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.அமர்வுகளில் பங்கேற்பது குறித்து ஆட்சேபம் தெரிவித்து வரும் கனடா உள்ளிட்ட சகல நாடுகளும் பங்கேற்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சில ஊடகங்களில் சில உறுப்பு நாடுகள் அமர்வுகளில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்ட போதிலும், உத்தியோகபூர்வமாக இதுவரையில் எந்தவொரு நாடும் அமர்வுகளில் பங்கேற்பதனை புறக்கணிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சகல உறுப்பு நாடுகளும் அமர்வுகளில் பங்கேற்கும் - இலங்கைஎனவே, சகல நாடுகளும் அமர்வுகளில் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.இதேவேளை, மனித உரிமை கண்காணிப்பகத்தின் தாளத்திற்கு இலங்கை அரசாங்கம் நடனமாடாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.மனித உரிமைக் கண்காணிப்பகம் நாட்டுக்கு ஆரோக்கியமான முறையில் எவ்வித விமர்சனங்களையும் வெளியிட்டதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக