வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

அமெரிக்கா குறித்த விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பாக விசாரணை!

News Serviceவீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்கத் தூதரகம் இலங்கையின் உள்விவகாரங்களில் குழப்பங்களை விளைவிக்க முயற்சிக்கின்றது என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் கருத்து தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியில் இது தொடர்பான விசாரணை நடத்தப்படும். எனினும், அரசாங்கம் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக