செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

இன்று ஜனாதிபதி யாழிற்கு விஜயம்; பரபரப்பானது யாழ்குடா!

News Serviceஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். நகர் துரித கதியில் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. இன்று ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் இவர்கள் பல முக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர். துரையப்பா விளையாட்டு அரங்கில் ஜனாதிபதி தலைமையிலான குழு வந்து இறங்குகிறது. அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலை உட்பட ஜனாதிபதி செல்லவுள்ள முக்கிய இடங்களும் துரித கதியில் காப்பெற் இடப்பட்டு வீதியின் இரு மருங்குகளும் சுத்தம் செய்யப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.


வைத்தியசாலையின் உட்புற வெளிப்புற சுழலில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் நிறைந்து காணப்பட்டனர். அவர்கள் தமக்கான கடமைகளை இன்றுதான் செவ்வனே செய்கிறார்கள் போல் தெரிகிறது. சுற்றுச்சுழலைத் துப்புரவு செய்வது, வீதி செப்பனிடுதல் போன்றவற்றுக்கு பெவாறுப்பான அதிகாரிகள் களத்தில் இறங்கி தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றி வருவதை வீதியில் திரண்டிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நீண்டநாள் செய்ய வேண்டிய வேலைகளை நேற்று ஒரு நாள் மட்டும் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளமையினால் தொழிலாளிகள் மிகவும் சிரமத்துடனேயே வேலையில் ஈடுபட்டுள்ளதனையும் காணமுடிந்தது. இன்று யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி வைத்தியசாலைக் கட்டடம் , சுன்னாகம் அனல்மின் நிலையம் போன்றவற்றைத் திறந்து வைப்பதுடன் யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக