ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் அமர்வின் நிகழ்ச்சி நிரலில், இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என கனடா உறுப்பு நாடுகளை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இலங்கை நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்க நேரிடலாம் எனத் தெரிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தற்போது லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார்.பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக