ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) காலை மன்னாரில் பேரணி ஒன்று இடம் பெற்றது. மன்னார் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த பேரணியின் போது மன்னார் வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த பேரணி இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதான பால வீதியில் ஆரம்பமானது. இதன்போது கலந்து கொண்ட மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை ஏந்தியாறு சென்றனர்.
நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷவா குற்றவாழி? அபிவிருத்தியின் தலைவர் ஜனாதிபதி, ஐ.நா பிரேரணையே ஒழிக போன்ற கோசங்களை எழுப்பியவாறு சென்றனர். ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்தது.
இதன் போது மன்னார் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க இம்மாதம் 21ஆம் திகதி பிரேணை ஒன்றை முன்வைக்கவுள்ளது. இலங்கையில் போர்குற்றம் இடம்பெற்றதாகவும், அதற்கு சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் எனவும் பல நாடுகள் தெரிவித்து வருகின்ற நிலையில் மன்னாரில் இவ்வாறான பேரணி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக