| ஜக்கிய நாடுகள் சபையில் போர்க்குற்ற ஆவணப் படம் இன்று திரையிடப்படுகிறது - அனுமதித்தார் நவநீதம்பிள்ளை!
[Friday, 2013-03-01 13:00:50]
| |
இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இரங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான சனல் - 4 இன் 'போர் தவிர்ப்பு வலயம்' (No fire zone) என்ற ஆவணப் படம் இன்று வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இந்த ஆவணப் படம் காண்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் தயார் நிலையிலுள்ளன என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவதானிப்பு நாடுகளின் இராஜ தந்திரிகளும், அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதன் போது கலந்து கொள்வர். அதேவேளை, 'போர் தவிர்ப்பு வலயம்' தயாரிப்பாளரான கெலும் மக்ரே ஆவணப் படத்தின் நம்பகத் தன்மை தொடர்பில் சர்வதேச பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன், முக்கிய பல விடயங்களையும் சுட்டிக்காட்டவுள்ளார் என்றும் தெரியவருகின்றது. |
|
| போர்க்குற்றம் குறித்தான ஆவணப் படத்தை மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் ஒளிபரப்புவதற்கு இடமளிக்கக் கூடாது என மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இலங்கை அரசு, குறித்த ஒளிநாடாவை போலியானது என நிராகரித்துள்ள நிலையில், அதை ஒளிபரப்புவது பேரவையின் கொள்கைக்கு முரணானது என்பது உட்பட மேலும் பல விடயங்களை சுட்டிக்காட்டி ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். எனினும், அந்தக் கடிதத்துக்கான பதிலை மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்கவில்லை. இந்நிலையிலேயே இன்று 'போர் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படம் இலங்கையின் எதிர்ப்பையும் மீறி வெளியாகின்றது. இதற்கான அனுமதியை ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வழங்கியுள்ளார். இது இலங்கை அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, குறித்த ஆவணப்படத்தை பார்வையிட்ட பின்னர் இலங்கைக்குச் சார்பான நாடுகள் கூட அமெரிக்கப் பிரேரணையை ஆதரிக்கும் நிலை ஏற்படும் என சனல் - 4 நிறுவனம் தெரிவிக்கின்றது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இதற்கு முன்னரும் ஆவணப்படங்களை ஆதாரத்துடன் தயாரித்து வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்ட பிரிட்டனின் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம், இம்முறை 'போர் தவிர்ப்பு வலயம்' என்ற தலைப்பில் புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இலங்கை நிராகரித்தாலும், இந்த விவகாரம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆவணப்படத்தின் சில காட்சிகள் காண்பிக்கப்பட்டதை அடுத்து, தமிழக கட்சிகள் யாவும் இலங்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இழைய மகனான பாலச்சந்திரன் இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது போன்ற காட்சிகளும்ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படம் ஜெனிவாவில் காண்பிக்கப்பட்ட பின்னர், சர்வதேச ரீதியில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள், இந்த ஆவணப்படம் சாவதேச போர்க்குற்ற விசதரணைக்கு வழிசமைக்கும் என்றும் கூறுகின்றனர். | |
தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வெள்ளி, 1 மார்ச், 2013
'போர் தவிர்ப்பு வலயம்' (No fire zone) என்ற ஆவணப் படம் இன்று வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இரங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான சனல் - 4 இன் 'போர் தவிர்ப்பு வலயம்' (No fire zone) என்ற ஆவணப் படம் இன்று வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. ஜ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இந்த ஆவணப் படம் காண்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் தயார் நிலையிலுள்ளன என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவதானிப்பு நாடுகளின் இராஜ தந்திரிகளும், அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதன் போது கலந்து கொள்வர். அதேவேளை, 'போர் தவிர்ப்பு வலயம்' தயாரிப்பாளரான கெலும் மக்ரே ஆவணப் படத்தின் நம்பகத் தன்மை தொடர்பில் சர்வதேச பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன், முக்கிய பல விடயங்களையும் சுட்டிக்காட்டவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக