செவ்வாய், 19 மார்ச், 2013

அரசை பாதுகாக்க ரணில் முயற்சி - சுரேஸ்

News Serviceஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்று வருகையில், அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றார் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டினார். அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அனைத்துக் கட்சிக் குழுக்கூட்டத்தினை கூட்டவேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம்சிங்க தலைமையிலான எதிரணிக்கூட்டணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது ,இவ்வளவு காலம் எதிர்க்கட்சித் தலைவர் எங்கிருந்தார் என்பது தெரியவில்லை , இவ்வாறாக இவர் கோரியுள்ளமை அர்சாங்கத்தைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது .

இதேபோல் ஜெனிவா கூட்டம் நடைபெற்று வரும் வேளையில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடங்கிய கருத்தரங்கொன்றும் கொழும்பில் நடத்தப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது என மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக