புதன், 13 மார்ச், 2013

இலங்கையில் மனிதஉரிமைகள் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றமே காணப்படுகிறது! - ஐரோப்பிய ஒன்றியம் கவலை

News Serviceஇலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றமே காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய அயர்லாந்தின் தூதுவர் கராட் கோர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். இலங்கையின் மனிதாபிமான மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சபை புதிய வரையறைகளை வெளியிட்டது.எனவே இதன் அடிப்படையில் இலங்கை செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது மனித உரிமைகள் மாநாடு இடம்பெறுகின்ற நிலையில், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பிலும், மனிதாபிமான விடயங்கள் தொடர்பிலும் இலங்கையின் பொறுப்புக் கூறுதலை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக