ஜெனீவாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் உள்ள தமது குழுவினருடன் ராணுவ அதிகாரிகள் சிலரையும் இணைக்குமாறு கோத்தபாயவை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கோத்தா மறுத்துள்ளார்.ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மறுத்து விட்டநிலையில் அது சிறிலங்காக் குழுவில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னைய கூட்டங்களில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பங்கேற்று, அரசகுழுவினருக்கு உதவியிருந்தனர். ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கும் சிறிலங்கா அரசகுழுவில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை.சிறிலங்கா இராணுவத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு முறியடிக்க, இராணுவ அதிகாரி ஒருவர் பங்கேற்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்ட போதும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்த விடயத்தில் தலையிட்டு தடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது ஜெனிவா சென்ற சிறிலங்கா தூதுக்குழுவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
செவ்வாய், 5 மார்ச், 2013
ஜெனீவா குழுவில் படைத்தரப்பு பங்குபற்ற கோத்தா தட
ஜெனீவாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் உள்ள தமது குழுவினருடன் ராணுவ அதிகாரிகள் சிலரையும் இணைக்குமாறு கோத்தபாயவை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கோத்தா மறுத்துள்ளார்.ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மறுத்து விட்டநிலையில் அது சிறிலங்காக் குழுவில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னைய கூட்டங்களில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பங்கேற்று, அரசகுழுவினருக்கு உதவியிருந்தனர். ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கும் சிறிலங்கா அரசகுழுவில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை.சிறிலங்கா இராணுவத்தை மையப்படுத்திய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு முறியடிக்க, இராணுவ அதிகாரி ஒருவர் பங்கேற்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்ட போதும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச இந்த விடயத்தில் தலையிட்டு தடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது ஜெனிவா சென்ற சிறிலங்கா தூதுக்குழுவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக