இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள பிரேரணை எத்தகையது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. வொஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் இது குறித்து விளக்கமளித்துள்ளார். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள பிரேரணை, கடந்த ஆண்டு இலங்கை மீது கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். "நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இன்னும் அதிகம் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், 2012ஆம் ஆண்டு தீர் மானத்தின் மீது இந்தப் பிரேரணை கொண்டுவரப்படும்.இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட, தனது மக்களுக்கான கடப்பாடுகளைப் பின்பற்றும்படி புதிய பிரேரணை இலங்கை அரசைக் கேட்டுக் கொள்ளும். இதுதான் பிரேரணையின் உள்ளடக்கம். இதற்கு நாம் அனுசரணை வழங்கி, ஆதரவு அளிப்போம்'' என்று பதிலளித்துள்ளார் பற்றிக்.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
ஞாயிறு, 3 மார்ச், 2013
இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை தொடர்பில் அமெரிக்கா விளக்கம்
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள பிரேரணை எத்தகையது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. வொஷிங்டனில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரெல் இது குறித்து விளக்கமளித்துள்ளார். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள பிரேரணை, கடந்த ஆண்டு இலங்கை மீது கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். "நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இன்னும் அதிகம் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், 2012ஆம் ஆண்டு தீர் மானத்தின் மீது இந்தப் பிரேரணை கொண்டுவரப்படும்.இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட, தனது மக்களுக்கான கடப்பாடுகளைப் பின்பற்றும்படி புதிய பிரேரணை இலங்கை அரசைக் கேட்டுக் கொள்ளும். இதுதான் பிரேரணையின் உள்ளடக்கம். இதற்கு நாம் அனுசரணை வழங்கி, ஆதரவு அளிப்போம்'' என்று பதிலளித்துள்ளார் பற்றிக்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக