சனி, 2 மார்ச், 2013

இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு இதுவரை எந்த முடிவினையும் எடுக்கவில்லை

இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தை மத்திய அரசு கவனமுடன் கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பாக வாழ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் குறித்து இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கிறது - நாராயணசாமிபிரதமர் அலுவலக விவகாரத் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, சென்னையில் இன்று (02) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு இதுவரை எந்த முடிவினையும் எடுக்கவில்லை.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்தியா முடிவு செய்யும் என்றும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக