ஜெனிவாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதியின் மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரான மகிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அழைப்பை புறக்கணித்து அவரைச் சந்திக்காமலேயே அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார்.இது ஜெனிவாவில் இராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.கடந்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது, அமைச்சர் மகிந்த சமரசிங்க, பக்கச்சார்புடன் செயற்படுவதாகவும், ஐ.நாவின் கடப்பாடுகளை மீறுவதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கடுமையாகத் தாக்கியிருந்தார்.இதையடுத்தே, அவர் நவநீதம்பிள்ளையை சந்திக்காமல் கொழும்பு திரும்பியுள்ளார். நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பை, மகிநத சமரசிங்க தவிர்த்துக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.நவநீதம்பிள்ளையை தாக்கும் வகையில், மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரை பல்வேறு நாடுகளுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி தூதுவர் ஹான்ஸ் சூமேக்கர், அநீதியான விமர்சனங்கள் நவநீதம்பிள்ளை மீது முன்வைக்கப்பட்டதாக குறை கூறியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
செவ்வாய், 5 மார்ச், 2013
நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பை மகிந்த சமரவீர தவிர்த்தது ஏன்? அரசியல் வட்டாரங்கள் கேள்வி!
ஜெனிவாவுக்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதியின் மனிதஉரிமைகள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரான மகிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அழைப்பை புறக்கணித்து அவரைச் சந்திக்காமலேயே அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார்.இது ஜெனிவாவில் இராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.கடந்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது, அமைச்சர் மகிந்த சமரசிங்க, பக்கச்சார்புடன் செயற்படுவதாகவும், ஐ.நாவின் கடப்பாடுகளை மீறுவதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கடுமையாகத் தாக்கியிருந்தார்.இதையடுத்தே, அவர் நவநீதம்பிள்ளையை சந்திக்காமல் கொழும்பு திரும்பியுள்ளார். நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பை, மகிநத சமரசிங்க தவிர்த்துக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.நவநீதம்பிள்ளையை தாக்கும் வகையில், மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரை பல்வேறு நாடுகளுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி தூதுவர் ஹான்ஸ் சூமேக்கர், அநீதியான விமர்சனங்கள் நவநீதம்பிள்ளை மீது முன்வைக்கப்பட்டதாக குறை கூறியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக