துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா நாடு திரும்பினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா எம்.பி. இன்று அதிகாலை 1.29 மணியளவில் சிங்கப்பூர் இகே14 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார். முல்லேரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த
சில்வா படுகாயமடைந்தார். இதனையடுத்து துமிந்த சில்வா சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை நாடு திரும்பியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக