சனி, 9 மார்ச், 2013

ஸ்ரீலங்கா ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிவிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கும் கலைஞர்!

News Serviceஇலங்கையில் சிங்களப் பேரினவாத ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேசப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்சவால் நடத்தப்பட்டதெல்லாம் தமிழினப் படுகொலையே அவர் அடுக்கடுக்காகச் செய்த தனைத்தும் போர்க் குற்றங்களே; அவர் தனது மனசாட்சியை நசுக்கி அழித்து விட்டு மீறிய தெல்லாம் மனித உரிமைகளையே எனவே அவரைச் சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும். இலங்கையில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12-வயது மகன், பாலச்சந்திரனைச் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண்களையும், முதியோர்களையும் கொன்றழித்த சரித்திரம் காணாத கொடுமைகளுக்கு ராஜபக்ச சர்வதேசச் சட்டப்படி பொறுப்பேற்று, உலக நாடுகளுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அத்துடன் இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் முழு மனதோடு ஆதரிப்பதாக அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன், இந்திய அரசே, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் பொது வாக்கெடுப்புக்கென தக்கதொரு தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; என்பவைகளுக்காக கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஜனநாயக நெறி பிறழாமல் அமைதியான முறையில் அறவழியில்12.3.2013 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும். இது நம்முடைய தொப்புள் கொடிச் சொந்தங்களான ஈழத் தமிழர்களுக்காக நாம் கட்டாயம் கடைப்பிடித்தே தீர வேண்டிய அடிப்படைக் கடமை என்ற உணர்வோடு அனைவரும் பங்கேற்க வேண்டுமென்ற எனது வேண்டுகோளை முன் வைக்கிறேன் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக