சனி, 9 மார்ச், 2013

அமெரிக்காவின் பிரேரணை ராஜபக்சவை போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்காது - சுப்பிரமணியசுவாமி

News Serviceஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள யோசனை தொடர்பில் இலங்கையுடன் பேச்சுக்கள் நடத்தப்படவேண்டும் என்று ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அமெரிக்க ஒபாமா நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்த செய்தியை பிடிஐ செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியை கடந்த வாரம் சந்தித்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த சுப்பிரமணியம் சுவாமி, அந்த நாட்டின் தெற்காசிய பிராந்திய உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக்கை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பில் சுப்பிரமணியம் சுவாமி தமது கருத்துக்களை வெளியிட்டார். அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான யோசனை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு வெற்றியாக அமைந்து விடும் என்று சுப்பிரமணியம் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறல் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக சர்வதேச ரீதியில் நியமிக்கப்பட்ட அமைப்புக்களால்; நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்றும் அவர் வாதிட்டார். இதேவேளை அமெரிக்காவின் யோசனை, ராஜபக்சவையோ அல்லது வேறு எவரையுமோ போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை என்று சுப்பிரமணியம் சுவாமி ரொபட் ஓ பிளெக்குடனான சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக