இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையின் விபரம் ஐ.நா. மனித உரிமைபேரவையின் இணையத்தளத்தில் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும்மேம்படுத்தல் எனும் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை வரைபு நேற்று முந்தினம் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்காக நேற்று ஜெனிவாவில் கூட்டமொன்றும் இடம்பெற்றது.நேற்று ஜெனீவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இக் கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, கியூபா, ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்தப் பிரேரணையில் உள்ள சொற்பதங்களில் மாற்றங்கள் செயற்பட வேண்டுமென்று இந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் சியராலியோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அமெரிக்காவின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வலிதற்றது என்றும் இதனால் கடுமையான நிபந்தனைகளை உள்ளடக்கி இந்தப்பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
சனி, 9 மார்ச், 2013
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை ஐ.நா. மனித உரிமை பேரவையில்
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையின் விபரம் ஐ.நா. மனித உரிமைபேரவையின் இணையத்தளத்தில் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும்மேம்படுத்தல் எனும் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை வரைபு நேற்று முந்தினம் ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த பிரேரணை தொடர்பில் விவாதிப்பதற்காக நேற்று ஜெனிவாவில் கூட்டமொன்றும் இடம்பெற்றது.நேற்று ஜெனீவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இக் கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, கியூபா, ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்தப் பிரேரணையில் உள்ள சொற்பதங்களில் மாற்றங்கள் செயற்பட வேண்டுமென்று இந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் சியராலியோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அமெரிக்காவின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வலிதற்றது என்றும் இதனால் கடுமையான நிபந்தனைகளை உள்ளடக்கி இந்தப்பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக