மன்னார் பேராயர் அதி வணக்கத்திற்குரிய அருட் திரு ஜோசப் சௌந்தரநாயகம் ஆண்டகை, தமிழீழ விடுதலைப் புலி தற்கொலைக் குண்டுதாரிகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் பேராயருடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவும் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை சந்தித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்திய பெண்ணை கொழும்பிற்கு அழைத்து வந்தவர், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்காக தற்கொலைக் குண்டுதாரியை அழைத்து வந்த நபர், களுத்துறை சிறையில் அமைச்சர் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர் உள்ளிட்ட பல முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களை மன்னார் ஆயரும், ஜயலத் ஜயவர்தனவும் சந்தித்துள்ளனர்.
சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதியுடன் குறித்த புலி உறுப்பினர்களை சந்தித்ததாக ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.வழக்கு விசாரணைகள் உரிய முறையில் நடாத்தப்படாமை, வழக்குகள் தொடரப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கைதிகள் தங்களது குறைகளை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக