திங்கள், 29 ஏப்ரல், 2013

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கையில் பொதுநலவாய மாநாடா ? யஸ்மின் சூகா அதிர்ச்சிApril 29, 2013 09:08 am

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கையில் பொதுநலவாய மாநாடா ? யஸ்மின் சூகா அதிர்ச்சிஇலங்கைக்கு எதிராக பல்வேறு மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டை அங்கு நடத்துவது அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் ஒருவரான யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரிக்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்களில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தனது சொந்த மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தற்போதும் தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் ஏபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரித்த யஸ்மின் சூகா,

இலங்கையில் மக்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதாகவும், காணாமற்போகின்றனர்.

போர்க்குற்றங்களை விசாரிக்கா விட்டால், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனடா கூறியுள்ளமையை யஸ்மின் சூகா பாராட்டுகிறேன்.

இலங்கை அரசாங்கத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படா விட்டால், பொதுநலவாய தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்த அவர்களை அனுமதிக்கக் கூடாது.

அவுஸ்திரேலியா உள்ளிட்ட, ஏனைய நாடுகள் தாம் மாநாட்டில் பங்கேற்போம் என்று பலவீனமான முறையில் கூறியுள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அங்கம் வகிக்கும் யஸ்மின் சூகா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக