வெள்ளி, 26 ஏப்ரல், 2013

இன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை குறித்து விவாதம்!

News Serviceபொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடு இன்று 26ம் திகதி பிரித்தானிய தலைநகர் லண்டனில் நடைபெறவுள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டை நடாத்துவது குறித்து இங்கு விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்க கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முன்வைத்த கோரிக்கையை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அந்த நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச சமுதாயம் அங்கீகரித்ததாகி விடும் என்று அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் அமைச்சர்கள் மாநாட்டிற்கு பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி தீபு மோனி தலைமை தாங்கவுள்ளார். அவுஸ்திரேலியா, கனடா, ஜமேக்கா, மாலைத்தீவு, சியாராலியோன், தான்சானியா, டிரினிடெட் டொபெக்கோ மற்றும் வனுஆட்டு ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இம்மாநாடு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக