சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடத்த தான் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால், சிறிலங்காவில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகக் கூறுவது தவறானது. சாதாரண விடயங்கள் கூட மனித உரிமை மீறலாகக் காட்டப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஊடக நிறுவ முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அவை தொடர்பில் விசாரணை நடத்த தாம் தயார். ஆனால், சர்வதேச ரீதியாகச் சுமத்தப்படும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை.
உதயம் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக